• Monthlywise

    May 2011
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • for you

  • ஆத்மாவும் அதுபடும்பாடும்

    வெளியீடூ 4

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 1

இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.

இத் தொடர், இசுலாம் பற்றி அறியாதவர்களுக்கும் எளிமையாக, அதன் கொள்கைகள் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறோம்.

வாசகர்கள் தங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொள்ளகிறோம். தங்களின் கருத்துப் பதிவுகள் எமக்கு இதனை மேலும் செழுமைப்படுத்திட பேருதவியாக இருக்கும் என்பதையும் சுட்டிட விழைகிறோம்.

தொடர் 1:

எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்சில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்உலகத்தின் எல்லா வித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட நபர்களையும் அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும் தான் நம்பி இருக்கின்றன.”

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

துவங்கும் முன்

 ஹதீஸ்கள் பற்றி ஓர் சிறிய அறிமுகம்

 என் சம்பந்தமாக எதையும் எழுதி வைக்காதீர்கள் என முகம்மதுநபி  உத்தரவிட்டிருந்தார்கள் .

 குர்ஆன்  எழுதிப் பதிவு செய்யப்படும் சூழ்நிலையில் ஹதீஸும் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம்? எது  முகம்மதுநபியின் பொன்மொழி? என்பதில்  குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை முகம்மதுநபி சொன்னார்கள். ஆகவே  நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

 ஆயினும்  அபூஹூரைரா போன்ற ஓரிரு முகம்மதுநபியின் தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று….

தொடர்ந்து படிக்க

Leave a comment